Design Hackathon 2023 Event - தமிழ்

DH23 - Design Thinking Hackathon 2023

 

பாதுகாப்பான சாலை பயணம்...

விபத்தில்லா சமுதாயம்...

உங்கள் எதிர்காலத்தை மாற்றியமையுங்கள்..!

 DH23 இல் புரிந்துணர்வு, வடிவமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றினை பயன்படுத்துங்கள்

 

Read in English हिंदी తెలుగు ಕನ್ನಡ

 

யாருக்காக? 

DH23 இல், பாதுகாப்பான சாலைப் பயணம் மற்றும் விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்க தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்த தயாராகவுள்ள கீழ்கண்ட பங்கேற்பாளர்கள் போட்டியிடலாம்.


8 முதல் 10 ஆம் வகுப்பு மாணாக்கர்கள்

11 முதல் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்கள்

இளங்கலை / முதுகலை கல்லூரி மாணாக்கர்கள்

 

ஒருங்கிணைந்த குழு வழிகாட்டுதல் (Unified Group Mentoring) மற்றும் பன்முக தீர்ப்பு அளவுகோல்கள் (Diversified Judging Criteria)

அனுபவம் மிக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சிந்தனை மற்றும் யுக்திகளையும் பகிர்ந்து கொள்ள ஏதுவாக பங்கேற்பாளர்கள் சிறு குழுக்களாக ஒன்றிணைக்கப்படுவார்கள்.

 

இத்தகைய அறிவார்ந்த பகிர்வு அடிப்படையிலான போட்டியிடலில், போட்டியாளர்களின் வெற்றியானது அவர்கள் சமர்பிக்கும் தீர்வுகளின் தனித்துவம் மற்றும் சிறப்பம்சங்களின் அடிப்படையில் வெளிப்படையாக தீர்மானிக்கபடுவது DH23 இன் சிறப்பாகும்.

 

“உங்கள் எதிர்காலத்தை மாற்றியமையுங்கள்.”. எதை குறிக்கின்றது? 

ஒவ்வொரு மாணாக்கரும் எதிர்கால சவால்களை சமாளித்து தத்தமது கனவுகளையும் லட்சியங்களையும் அடைய தேவையான அடிப்படை திறன்களான புரிந்துணர்தல்‌, வடிவமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவினை (AI) பயன்படுத்தும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு ஒரு களம் அமைத்து கொடுப்பதன் அவசியத்தை உணர்த்துவதே உங்கள் எதிர்கால மாற்றம் போட்டி குறிக்கின்றது..

 

எப்பொழுது?





நிகழ்வு 18 நவம்பர் சனிக்கிழமை மற்றும் 19 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை 2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஆன்லைனில் நடைபெறும்.

 

நிகழ்ச்சி நிரல் & நிகழ்வு அட்டவணை 

விரிவான அட்டவணையை இங்கே காணலாம்

 


நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும்?

 

நாம் பல்வேறு சமூக சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு நடுவில் வாழ்கிறோம். அதில் குறிப்பிட தக்க ஒன்று சாலை விபத்துக்கள்.. தினசரி இந்திய சாலைகளில் 427 பேர் விபத்துகளினால் தங்களது விலைமதிப்பில்லா உயிரினை இழக்கின்றார்கள்.

 

2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதன்மையான சமூக பிரச்சனைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள சாலை விபத்துகளுக்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தீர்வு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தை நீங்கள் என்றாவ்து உணர்ந்திருக்கின்றீர்களா?

 

நமது சமூகம் மற்றும் நம் ஒவ்வொருவரின் சாலை சார்ந்த செயல்பாடுகளில் அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் கனவு காண்கிறீர்களா? ஆம் எனில், எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? DH23 என்ற இந்த நிகழ்வில் சேர்வதன் மூலம் உங்கள் பங்களிப்பை துவக்கலாம்,

 

உங்கள் யோசனைகளை நடைமுறை படுத்துவதற்கான வழிகளை கற்றுக் கொள்வீர்கள். வெற்றியையும் உங்கள் கனவுகளை அடைவதற்கான திறன்களையும் பெறுவீர்கள்.

 

 

DH23 உங்களின் நாளைய எதிர்காலத்தை எப்படி வடிவமைக்கிறது:

DH23 மற்ற பிற நிகழ்வுகளை போல ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு நிகழ்வில் நீங்கள் பங்கேற்கின்றீர்கள். 

 

உங்கள் மாற்றத்திற்கான திட்டம்: 

புரிந்துணர்வு, வடிவமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பாதுகாப்பான சாலைகள் மற்றும் விபத்திலா சமுதாயத்தை உருவாக்குவதில் பங்காற்றுதல்:

நமது DH23 ஆன்லைன் வழிகாட்டி மற்றும் போட்டிகளுக்கென பிரத்தியேகமான மற்றும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட அமர்வுகள் ஒவ்வொரு போட்டியாளரும் தனது பிற சக மனிதர்களின் பார்வையில் உலகை பார்க்க கற்றுக் கொள்கிறார்கள், 


 நீங்கள் நமது உலகில் காணப்படும் ஆனால் பிறரால் எளிதில் கவனிக்க இயலாத சிக்கல்களை கண்டறிவதிலும் அவற்றிற்கு நிஜ உலகின் மீதான தாக்கத்தை தரவல்ல தீர்வுகளையும் முன் வைப்பதிலும் அடிப்படையான மற்றும் நாளைய எதிர்காலத்தின் தவிர்க்க இயலாத திறன்களான புரிந்துணர்வு வடிவமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்பதற்கான திறன்களை பெறும் ஒரு சிறந்த தளத்திற்கு வந்திருக்கின்றீர்கள்.

 

வடிவமைப்பு சிந்தனை (Design Thinking) பட்டறைகள்: 

நமது வடிவமைப்பு சிந்தனைக்கான பயிற்சி பட்டறையின் மூலமாக நமது சமூகத்தை பாதிக்கும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள் மற்றும் சிக்கல்களை கண்டறிதல், அது தொடர்பான முதல்-சிந்தனையை வளர்த்தல், அவற்றிற்கான தீர்வுகளை கண்டறிதல் ஆகிய செயல்பாடுகளுக்கு உங்களை தயார் படுத்துவதுடன் உங்களை ஒரு உலகளாவிய கண்டுபிடிப்பாளராக சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் அதிகாரம் கொண்டவராக உங்களைஉருவாக்கும்.

 

செயற்கை நுண்ணறிவு(AI) கருவித்தொகுப்புகள்: 

அதிநவீன தொழில்நுட்பங்களை கையாள தெரிந்தவர்களுக்கே எதிர்காலம் சொந்தமானது. அவ்வகையில் நமது செயற்கை நுண்ணறிவினை அறிமுகப்படுத்தும் ஆன்லைன் அமர்வுகள் மூலம் புள்ளி விவரங்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், தரவுகளின் போக்குகள் கண்டறிந்து அவற்றின் அடிப்படையில்தீர்வுகளை உருவாக்கும் ஒரு சிறந்த ஆய்வாளராக உங்களை வடிவமைக்க உதவி செய்யும்.

 

நெட்வொர்க்கிங் & வழிகாட்டுதல்: 

தொலைநோக்கு பார்வை கொண்ட முன்னணி தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் உங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து வெற்றிக்கான அணுகுமுறைகளை கற்றுக்கொள்ள நமது நெட்வொர்க்கிங் மற்றும் வழிகாட்டுதல் அமர்வு உதவி செய்யும். இது கற்றலில் உங்களுக்கு உதவுவதுடன் உங்களது எதிர்காலம் முயற்சிகளுக்கான ஒரு வழிகாட்டும் மற்றும் ஒத்துழைப்பை நல்க கூடிய ஒரு நெட்வொர்க்கினை உருவாக்கும்

 

நிஜ உலக சவால்கள்: 

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை கையாள்வது தொடர்பான தீர்வுகளை கண்டறிவதில் DH23 இல் வழங்கப்படும் சவால்கள் கற்பனையானவை அல்ல. அவை உண்மையான தினசரி பிரச்சினைகளில் வேரூன்றியிருக்கின்றன, மேலும் உங்களது தீர்வுகள் சமூகத்தின் மீதான ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

 

பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய டிஜிட்டல் சூழல்: 

பாதுகாப்பான இணைய வழி தொடர்புகள் என்பது முன்னுரிமை கொண்ட ஒன்றாகும். பல்வேறு பின்னணியில் உள்ள பங்கேற்பாளர்களின் சிறப்பான இணைய வழி பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

DH23 இன் முடிவில், பங்கேற்ற மாணாக்கர் ஒவ்வொருவரும் எதிர்கால தொழில்நுட்பங்களை கையாளத் தெரிந்தவராகவும் பிறருடன் இணைந்து பணியாற்றும் மனநிலை கொண்டவராகவும் நீண்டகால தீர்வுகளை முன்வைக்கும் சிறந்த படைப்பாளியாகவும் பரிணாம வளர்ச்சி பெறுகின்றார்கள் 

 

கற்றல் மீதான உங்கள் வாழ்நாள் ஆர்வம், புதுமையை போற்றுதல், தாக்கத்தை தரவல்ல நீண்டகால தீர்வுகளை படைத்தல் ஆகியவற்றுக்கான பாதையில் வெற்றிகரமாக பயணிக்க துவங்கி விட்டீர்கள் என்பதை உணர்வீர்கள். 

 

உங்கள் நாளை DH23 இல் தொடங்குகிறது. இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

 

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற DH நிகழ்வுகள்

DH 21 - 2021 இல், கழிவுகளை "மறுசுழற்சி-மறுதலித்தல் (Reuse - Refuse)" என்ற தலைப்பின் கீழ், DH21 ஆனது 250க்கும் அதிகமான நகரங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு வடிவமைப்பு சிந்தனையைப் பயன்படுத்தி தொலைநோக்கு பார்வை கொண்ட பயனுள்ள தீர்வுகளை உருவாக்கினர்.


DH-22 நிகழ்வானது இந்தியா@100 என்ற தலைப்பில் நடத்தப்பட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1800க்கும் மேற்பட்ட பங்காளர்கள் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற குழுவினரின் ஆஸ்ட்ராய்ட் ஃபார்மிங் முறை மற்றும் கண்காணித்தலுக்கான மென்பொருள் ஆகியவை சிக்கல்களுக்கான தீர்வுகளை கண்டறிவதிலும், மாற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் எல்லையற்ற ஆற்றலை நிரூபித்தது.

 

DH-23 ஐந்து வருடங்கள் நடத்தப்பட்ட ஹேக்கத்தான் நிகழ்வுகளில் கலந்து கொண்ட வழிகாட்டுநர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பின்னூட்டங்கள் மற்றும் சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டிற்கான இந்த ஹேக்கத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தற்போது நமது ஹேக்கத்தான் நிகழ்வுகள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நடத்தப்படுவதுடன், இந்நிகழ்வில் A.I. எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் ஒருங்கிணைக்கப்பட்டு நமது செயல்பாட்டு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 12 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகள் தற்போது உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவை எனஇரண்டு பிரிவுகளாக சுருக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக கையாளப்பட்டு வந்த நேரடி வழிகாட்டுதல் முறை என்பது தற்போது ஆன்லைன் வழிகாட்டுதல் முறையாக மாற்றப்பட்டுள்ளது.

 

மேலும் அதிக பட்ச பங்கேற்பாளர்களுக்கான வரையறை 2,500 என நிர்ணயிக்கப்பட்டு முதலில் வரும் போட்டியாளர்க்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் சிறந்த பலன்களை பெறவும் ஏதுவாக்கப்பட்டுள்ளது வெற்றி பெறும் போட்டியாளர்கள் பரிசுத்தொகை ரூபாய் 50,000 வரை வெல்லலாம்.எனவே இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான உங்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய இதுவே உகந்த நேரம் ஆகும்.

 

DH23 ஏற்படுத்தும் மாற்றங்கள்

DH23 இல் கலந்து கொண்ட பிறகு எதிர்பார்க்க கீழ்கண்ட மாற்றங்களை பல்வேறு தரப்பினர் பெறவுள்ளதை பின்வரும் காட்சிகள் சித்தரிக்கின்றன.

 

8 - 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றியமைக்க முடியும்? 

 

 

9 ஆம் வகுப்பு படிக்கும் மாயா டிஜிட்டல் விழிப்புணர்வு, புரிந்துணர்தல்‌, வடிவமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை பயன்படுத்தி தனக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆன்லைன் கேலிவதையினை தடுக்கும் வலிமை பெறுகிறார்.

 

இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்? 

 

 

ரோஹித் ஒரு இளங்கலை மாணவர். இவர் தனக்கு ஏற்படும் கல்வி மற்றும் தனிப்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டு அவற்றை வெற்றி கொள்வதற்கு DH23 லிருந்து பெற்ற அனுபவம் மற்றும் புதுமையான நுண்ணறிவுத் திறன்களை பயன்படுத்துகிறார்.

 

பணி சூழலுக்கு தங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைத்து கொள்ள முடியும்?  

 

 

சில்பா தான் இணைந்துள்ள புதிய பணியிடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் அதிக ஊதியம் பெறவும் DH23 லிருந்து பெற்ற அனுபவம் மற்றும் புதுமையான ஆற்றல்களை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை காணலாம்.

 

பணியாளர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைத்து கொள்ள முடியும்?  


 

புதுமையான முயற்சிகள் மூலம் தனது MNCக்கு குறிப்பிடத்தக்க மதிப்பை சேர்த்த ஜேக்கப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

 

வணிக உரிமையாளர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைத்து கொள்ள முடியும்? 

 

 

விஷாலின் புதுமையான கண்டுபிடிப்புகள் அவரது நகை ஷோரூமின் வருவாயை மூன்று மடங்காக உயர்த்தியது

 

ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும்?

 

 

வெற்றிகரமான எம்விபியை உருவாக்கும் அம்ரித்தின் பயணத்தின் நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.

 

ஆசிரியர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும்? 

 

 

ஷர்மாவின் உத்வேகத்தைப் பெற்று, கல்வியாளர்கள் மாணவர்களின் ஈடுபாட்டை மேம்படுத்தவும், ஆற்றல் மிக்க கற்றல் சூழலை உருவாக்கவும், கல்வியில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும் தொழில்நுட்பத்தை புதுமைப்படுத்தி பயன்படுத்தலாம்.

 

குடும்பங்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும்?  

 

 

லாஜிஸ்டிக்ஸ், மார்க்கெட்டிங், தொழில்நுட்பம் மற்றும் கலைத்திறன் ஆகியவற்றில் தங்களின் தனித்துவமான திறன்களைப் பயன்படுத்தி 'GlobaEars'ஐ உருவாக்க குப்தா குடும்பத்தைப் போலவே, குடும்பங்கள் தங்கள் தனிப்பட்ட பலத்தை ஒருங்கிணைத்து, தொடர்ச்சியாக கற்றுக் கொண்டு சிறந்த தீர்வுகளை உருவாக்குவதற்கு கூட்டு முயற்சியில் உங்கள் எதிர்காலத்தை மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் வெற்றிகரமான சர்வதேச இ-காமர்ஸ் வணிகம், இந்திய

கைவினைத்திறன் உலகிற்கு வெளிப்படுத்துகிறது.

 

குழுக்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும்?  

 

 

பல்வேறு குழுக்கள் ஒத்துழைப்பு மற்றும் சிக்கலைத் தீர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம்.

 


Testimonials


FAQs

Enquiry Form


DQ Labs Private Limited


FB logo